பெண்கள் சமூக முன்னேற்றம், கல்வி, மனிதாபிமான சேவை மற்றும் சமூக வலுவூட்டல் ஆகிய துறைகளில் நான்கு தசாப்தங்களாக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் YWMA (Young Women's Muslim Association) அமைப்பின் 40ஆம் ஆண்டு நிறைவு விழாவும் நூல் வெளியீட்டு நிகழ்வும் இன்று (02) கொழும்பிலுள்ள Grand Zenith மண்டபத்தில் YWMA அமைப்பின் தலைவி திருமதி பவாஷா தாஹா அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் மலேசியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் மேதகு பத்லி ஹிஷாம் ஆதம் (His Excellency Badli Hisham Adam) அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார்.
விசேட அதிதியாக, கல்முனை முன்னாள் மாநகர பிரதி முதல்வரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பொருளாளரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேஷனின் ஸ்தாபகத் தலைவருமான கௌரவ ரஹ்மத் மன்சூர் அவர்கள் கலந்துகொண்டார்.
மேலும், சமூக செயற்பாட்டாளர்கள், கல்வியாளர்கள், புத்திஜீவிகள், தொழிலதிபர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் பெருமளவில் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில், அமைப்பின் கடந்த 40 ஆண்டுகால சேவைகள், பெண்கள் முன்னேற்றத்திற்காக மேற்கொள்ளப்பட்ட அர்ப்பணிப்பான பணிகள் மற்றும் எதிர்கால நோக்கங்கள் குறித்து சிறப்பாக எடுத்துரைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அமைப்பின் நினைவு நூலும் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது.
சமூக சேவை, பெண்கள் அதிகாரமளித்தல், கல்வி மேம்பாடு மற்றும் பெண்களின் தலைமைத்துவ வளர்ச்சிக்காக YWMA அமைப்பு கடந்த நாற்பது ஆண்டுகளாக ஆற்றி வரும் அர்ப்பணிப்புமிக்க சேவைகளைப் போற்றும் வகையில், இந்நிகழ்வு பெருமையும் பொருளும் மிக்க ஒரு வரலாற்று மைல்கல்லாக அமைந்தது.
(எம்.சி.எம்.ஷம்சுல் முனா, ஏ.எஸ்.எம்.அர்ஹம்)



















0 Comments