Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

சிலோன் மீடியா போரத்தின் 7வது ஆண்டு நிறைவு விழா, மயோன் எக்ஸ்பிரஸ் அனுசரணையில் நுவரெலியாவில் விமரிசையாகக் கொண்டாட்டம்



சிலோன் மீடியா போரத்தின் ஏழாவது ஆண்டு பூர்த்தி விழா மற்றும் விசேட பாராட்டு விழா, நேற்று முன்தினம் புதன்கிழமை (29) நுவரெலியா லேக் வியூ கார்டன் திறந்த வெளியரங்கில் (Lake View Garden) மிக விமரிசையாகக் நடைபெற்றது.

சிலோன் மீடியா போரத்தின் தலைவர் கலாநிதி றியாத் ஏ. மஜீத் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வு, இரு நாள் ஊடகச் சுற்றுலாவினை உள்ளடக்கியதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வுக்கு அனுசரணையினை மயோன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் வழங்கியது.

இந்நிகழ்வில் சிலோன் மீடியா போரத்தின் செயலாளர் நூருல் ஹுதா உமர் சிறந்த ஆண்டின் விபரனக் கட்டுரைக்கான தேசிய விருது பெற்றமைக்காகவும் சமாதான ஊடக அமைப்பின் தலைவர் சிரேஷ்ட ஊடகர் எம்.எம்.ஜெஸ்மினின் நீண்ட கால ஊடகப் பணிக்காகவும் லக்ஸ்டோ மீடியா நெட்வேர்க்கின் தலைவர் ஏ.எல்.அன்சார் ஊடகத்துறை மற்றும் அறிவிப்புத் துறைக்காகச் சர்வதேச விருது பெற்றமைக்காகவும் பொன்னாடை போர்த்தப்பட்டு, நினைவுச் சின்னங்கள் வழங்கி மிக உயரிய முறையில் கௌரவிக்கப்பட்டனர்.

மேலும் ஊடகவியலாளர்களின் பிள்ளைகளின் கல்விச் சாதனைகளை ஊக்குவிக்கும் முகமாக க.பொ.த (சாதாரண தர) பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றமைக்காக சிலோன் மீடியா போரத்தின் பொருளாளர் ஏ. எஸ். எம். முஜாஹித்தின் புதல்வர் எம்.எம். சைபுல் ஷிஹாப் மற்றும் செயற்குழு உறுப்பினரும் வியூகம் டிவியின் பணிப்பாளருமான ஜனூஸ் சம்சுதீனின் புதல்வர் ஜே. எம். றஹ்பத் சரோஸ் மற்றும் கிழக்கு மாகாண பாடசாலைக்கிடையிலாளான அஞ்சல் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற சிரேஷ்ட ஊடகர் எம்.எம்.ஜெஸ்மினின் புதல்வர் எம்.ஜே. ஹூஸ்னி ஆகியோருக்கு பரிசில்களும் பதக்கங்களும் வழங்கப்பட்டன:

இதில் சிலோன் மீடியா போரத்தின் ஏழாவது ஆண்டு பூர்த்தி விழாவினை முன்னிட்டு நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகளுக்கு சமாதான ஊடக அமைப்பின் தலைவரும் மாஸ்டர் பிரிண்டர்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளருமான எம்.எம். ஜெஸ்மின் அனுசரணையில் மாபிள் மக் மற்றும் ஊடகவியளர்களுக்கு குறிப்பு புத்தகம் (Note Book) என்பன வழங்கி வைக்கப்பட்டன.

மேலும் மயோன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் 40 ஆவது ஆண்டு ஆண்டு பூர்த்தி விழாவினை முன்னிட்டு நிகழ்வில் கலந்து கொண்ட ஊடகவியளர்களுக்கு மயோன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.றிஸ்வானினால் கொழும்பு சென்றுவர ஒரு வழிப்பாதைக்கான கட்டணத்தில் 50% தள்ளுபடி பவுச்சர் (Gift Vouchers) வழங்கி வைக்கப்பட்டன.

அத்தோடு இந்நிகழ்வுக்கு அனுசரணை வழங்கிய மயோன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.றிஸ்வானுக்கு சிலோன் மீடியா போரத்தின் நிர்வாகத்தினரால் பொன்னாடை போர்த்தப்பட்டு, நினைவுச் சின்னம் வழங்கி மிக உயரிய முறையில் கௌரவிக்கப்பட்டார்.

மேலும் இரு நாள் ஊடகச் சுற்றுலாவினை ஏற்பாடு செய்தமைக்காக சிலோன் மீடியா போரத்தின் தலைவர் உள்ளிட்ட நிர்வாகத்தினருக்கு எப் நியூஸ் செய்திச் சேவையின் பணிப்பாளர் பளீல் ஏ.மஜீதினால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தார்.

இந்த விழாவில் சிறப்பு அதிதிகளாக நுவரெலியா மாநகர சபை பிரதி மேயர் எஸ். யோகராஜ், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம், நுவரெலியா மாவட்ட லயன்ஸ் கழகத்தின் தலைவர் எம்.பெரியசாமி, நுவரெலியா மாவட்ட ஊடக அமைப்பின் தலைவர் எஸ்.தியாகு, தேசிய அமைப்பாளர் எஸ். சிவக்குமரன், செயற்குழு உறுப்பினர் என்.கார்த்திக், மயோன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.றிஸ்வான், அரசியல் விமர்சகர், சமூக செயற்பாட்டாளர் முனை மருதவன் எம்.எச்.எம். இப்ராஹிம், சமாதான ஊடக அமைப்பின் தலைவரும் மாஸ்டர் பிரிண்டர்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளருமான எம்.எம். ஜெஸ்மின் அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளத்தின் அமைப்பாளர் யூ.எல்.எம். றியாஸ், காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவர்  எம்.எஸ்.எம். நூர்தீன், சிரேஷ்ட தலைவர் முஸ்தபா மௌலவி, சாய்ந்தமருது சன்றைஸ் பணிப்பாளர் ஏ.வி.எம்.நளீம், சுயாதீன ஊடகவியலாளர் போரத்தின் தலைவர் எம்.ஏ.சி.எம் ஜெலீஸ், செயலாளர் எம்.எச்.எம்.அன்வர் என பல முக்கிய பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.

கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களையும் சேர்ந்த ஊடகவியலாளர்களின் பங்கேற்புடன், நுவரெலியாவின் எழில்மிகு ரம்மியமான சூழலில் இந்த 7வது ஆண்டு நிறைவு விழா ஊடகத்துறையினரின் ஒற்றுமையையும் சாதனைகளையும் பறைசாற்றும் வகையில் மிகச் சிறப்பாக நிறைவுற்றது.

Post a Comment

0 Comments