Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

அநுராதபுர மாவட்டத்தில், ஆர் ஜே மீடியாவின் இலவச செயலமர்வு

Puthiya Oli

ஆர் ஜே மீடியா ஊடக வலையமைப்பானது, தனது ஆறு வருடப் பூர்த்தியை முன்னிட்டு, இலங்கையின் 25 மாவட்டங்களையும் மையமாகக் கொண்டு ஊடகம், தலைமைத்துவம், மருதாணிக் கலை மற்றும் மணப்பெண் அலங்காரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இலவச செயலமர்வுகளை நாடளாவிய ரீதியில் நடத்தி வருகின்றது.

அதன் ஒரு அங்கமாக, அநுராதபுர மாவட்டத்தை மையமாகக் கொண்டு ஒருநாள் இலவச செயலமர்வு, நேற்று (04) அநுராதபுர ஸாஹிரா கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. 

இச்செயலமர்வு, ஆர் ஜே மீடியாவின் அநுராதபுர மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.பாத்திமா அப்ரா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், மாணவர்களுக்கான தலைமைத்துவம் மற்றும் ஊடக செயலமர்வை, ஆர் ஜே மீடியா பணிப்பாளரும், ஊடகப் பயிற்சிவிப்பாளருமான ஏ.எம்.இன்சாப் வழங்கி வைத்தார்.

மேலும், மருதாணிக் கலை தொடர்பான விரிவுரையை எம்.எச்.நிஷ்வதுல் ஷகீகா, மணப்பெண் அலங்காரம் தொடர்பான விரிவுரையை, தகவல் தொழில்நுட்பக் கற்கையில் உயர் தேசிய டிப்ளோமா கற்கை நெறியைப் பூர்த்தி செய்தவரும், அழகுக் கலை நிபுணருமான என்.எப்.அப்ரா ஆகியோர் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும்; இந்நிகழ்வின் அதிதிகளாக, நொச்சியாகம அல் ஹிக்மா முஸ்லிம் மகா வித்யாலயத்தின் ஆசிரியை என்.எஃப்.நப்லா, அநுராதபுர நியூ ஓரியண்ட் ஜூவல்லர்ஸ் பணிப்பாளர்

எ.என்.எ.நாசிர், லக்சரி ஹோல்டிங் பணிப்பாளர்

எம்.ஜே.எம்.மும்தீர் ஆகியோர் கலந்து சிறப்பித்ததுடன், அநுராதபுர மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் அதிகமானோர் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்ததோடு, கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.




Post a Comment

0 Comments