Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

இரண்டாவது முறையாக ஆர்.சி.பி அணி கிண்ணத்தை சுவீகரித்தது

Puthiya Oli


இந்திய மகளிர் ப்ரீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டியில் டெல்லி கெப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி ரோயல் செலெஞ்சர்ஸ் பெங்களூரு அணி கிண்ணத்தைச் சுவீகரித்தது.


வதோதரா மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ரோயல் செலெஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.


இதன்படி முதலில் துடுப்பாடிய டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 203 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.


204 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பாடிய ரோயல் செலெஞ்சர்ஸ்; பெங்களூரு அணி, அபாரமாக விளையாடி 4 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.


இதன் மூலம் மகளிர் ப்ரீமியர் லீக் தொடரில் 2 ஆவது முறையாக சம்பியன் பட்டத்தை ரோயல் செலெஞ்சர்ஸ் பெங்களூரு அணி கைப்பற்றியது. 


முன்னதாக 2024 ஆம் ஆண்டுக்கான தொடரிலும் ரோயல் செலெஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் அணி வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments