Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

ஓட்டமாவடி - மீராவோடை மீரா ஜும்ஆப் பள்ளிவாசலில் மாணவர்கள் கௌரவிப்பு

Puthiyaoli


ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மீராவோடை மீரா ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாகம் ஏற்பாடு செய்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு (31) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. 

பள்ளிவாசல் தலைவர் எம்.ஏ.ரஷீட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை எழுதி வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளைப் பெற்றுக் கொண்ட மாணவர்கள் நினைவுப் பதக்கம் அணிவிக்கப்பட்டு புத்தகப் பை வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

இதில், மீராவோடை மீரா ஜும்ஆப் பள்ளிவாசல் பிராந்தியத்துக்குட்பட்ட பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 37 மாணவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். 

இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் வீ.ரீ.அஜ்மீர் கலந்து கொண்டதுடன், ஏனைய அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வி அலுவலக பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.ஜே.மர்சூக் மற்றும் ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினரும் மீராவோடை பிராந்திய கல்வி அபிவிருத்தி குழு தலைவருமான கே.பி.எஸ்.ஹமீட், பிரதேச சபை உறுப்பினர்களான எம்.எம்.எஸ்.ஹலால்தீன், எம்.அலி அன்சார், மீராவோடை அல் ஹிதாயா வித்தியாலய அதிபர் எம்.சீ.எம்.அஜ்மீர், உதுமான் வித்தியாலய அதிபர் எம்.பி.முபாரக், அமீர் அலி வித்தியாலய அதிபர் எம்.எச்.எம்.முபாரக் சிறாஜி, பதுரியா நகர் அல் மினா வித்தியாலய அதிபர் எம்.ஐ.உபைத், மீராவோடை அமீர் அலி வித்தியாலய ஓய்வுபெற்ற அதிபர் எம்.எம்.மஹ்ரூப், கற்பித்த ஆசிரியர்கள், பள்ளிவாசல் நிர்வாகத்தினர் உட்பட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.





 (எச்.எம்.எம்.பர்ஸான்)

Post a Comment

0 Comments