Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

ரெசின் கலை மூலம் அழகு பொருட்கள் தயாரித்தல் தொடர்பான பயிற்சி செயலமர்வு




ரெசின் கலை மூலம் அழகு பொருட்கள் தயாரித்தல்  தொடர்பாக யுவதிகளுக்கு பயிற்சி செயலமர்வு நேற்று (05) சாய்ந்தமருது பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.


அம்பாறை மாவட்ட சமுர்த்தி காரியாலயத்தின் ஏற்பாட்டில் மாவட்ட சமுர்த்தி முகாமையாளர் ரஞ்சனியின் நெறிப்படுத்தலில் இப்பயிற்சி செயலமர்வுகள் மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்களில் இடம்பெற்று வருகின்றன.

இதனடிப்படையில் சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி வங்கிச் சங்க முகாமையாளர் றியாத் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரும் பதில் மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளருமான ஜெகராஜன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் கல்முனை பிரதேச செயலக சமுர்த்தி தலைமைப் பீட சிரேஷ்ட முகாமையாளர் அன்வர், சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் றிபாயா, அபிவிருத்தி உத்தியோகத்தர் ஷர்பீன், காரைதீவு சமுர்த்தி கருத்திட்ட உதவியாளர்  பாயிஸ் உள்ளிட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வுக்கு பயிற்றுவிப்பாளராக கல்வி அமைச்சின் ரெசின் கலை பயிற்றுவிப்பாளர் சஞ்சலா சுபாசினி கலந்து கொண்டு இப்பயிற்சி செயலமர்வை நடாத்தினார். இதில் சாய்ந்தமருது, கல்முனை, காரைதீவு, நிந்தவூர், சம்மாந்துறை ஆகிய பிரதேச செயலகங்களிலிருந்து பயிற்சியாளர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.





(ஹாரீஸ்)


Post a Comment

0 Comments